செயற்பாடுகள்

விளையாட்டு விழா:
குழந்தைகள் பெரியோர் என்று எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் தாயக விளையாட்டுகளையும் உள்ளடக்கி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் விளையாட்டு நிகழ்வு. கிளித்தட்டு, உதைபந்தாட்டப் போட்டிகளும் நடாத்தப்படும்.

ஆண்டு விழா:
சிறுவர்களதும்  பெரியோர்களதும் கலை வெளிப்பாடுகளுக்கு மேடையமைப்பதற்காகவும் றூகலாண்ட் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்காகவும் ஆண்டுதோறும் நடாத்தப்படும் நிகழ்வு.

பொங்கல் விழா:
தமிழரின் பண்பாட்டு நாளாகிய தைப்பொங்கலை ஒட்டி பொங்கல் உண்டு றூகலாண்ட் தமிழர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு.

ஈழத்தமிழர் உதவித்திட்டம்:
றூகலாண்ட் வாழ் தமிழர்களால் தாயகத்தில் அல்லலுறும் எம்மவர்க்கு உதவும் திட்டம். இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து உதவலாம்.

இளையோர் நிகழ்வுகள்:
ஈழத்தமிழர் சங்க அங்கத்தவர்களாகிய இளையோர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கோ விளையாட்டுப்  பயிற்சிகளுக்கோ தளம் ஏற்படுத்திக் கொடுத்தல்.